தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பு தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்ற வருகின்றன.

இந்த நிலையில் தொழிலதிபரும் திரைப்பட நடிகருமான லெஜெண்ட் சரவணன் காஷ்மீர் சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் அடுத்தடுத்து பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

லியோ படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் லெஜெண்ட் சரவணன் காஷ்மீர் சென்று இருப்பதால் அந்த படத்தில் இவரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

அதற்கு ஏற்றவாறு லெஜன்ட் இன் காஷ்மீர் என்று ட்விட்டரில் அவர் அண்மையில் பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது காத்திருப்பு நெருங்குகிறது சுவாரஸ்யமான அறிவிப்புகள் சில தினங்களில் என்று கூறி சரவணன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்து பலரும் லெஜெண்ட் சரவணன் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர் லியோ திரைப்படத்தில் நடித்தால் என்ன மாதிரியான கதாபாத்திரம் இவருக்கு வழங்கப்படலாம் என்றும் ரசிகர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

தற்போது காஷ்மீரில் லெஜென் சரவணன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.