ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்..! ‘LIK’ படத்தின் அதிரடி வசூல் வேட்டை..!! – cinefeeds
Connect with us

CINEMA

ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்..! ‘LIK’ படத்தின் அதிரடி வசூல் வேட்டை..!!

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LiK) திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரீ-புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

ப்ரீ-புக்கிங் தொடங்கிய குறுகிய காலத்திலேயே இப்படம் இதுவரை சுமார் ரூ. 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் இசை மற்றும் ஒரு புதிய அறிவியல் சார்ந்த காதல் கதைக்களம் என்பதால், படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க, யோகி பாபு, சீமான், கௌரி ஜி. கிஷன் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், ஒரு எதிர்கால தொழில்நுட்பத்தைச் சார்ந்த (Sci-Fi) நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.   

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in