CINEMA
‘தெய்வத்திருமகள்’ குட்டி சாராவா இது? அடையாளமே தெரியாம ஆளே மாறிட்டாரே..! இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!”
‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் சென்சேஷனல் நாயகியாக உருவெடுத்துள்ள சாரா அர்ஜுன் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறார். ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘துரந்தர்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் வெற்றியால் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார்.
சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த போட்டோஷூட்டில், மிகவும் ஸ்டைலான மற்றும் கிளாமரான தோற்றத்தில் சாரா அர்ஜுன் காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ‘குட்டி சாராவா இது?’ என ஆச்சரியப்படுவதோடு, அவரது அதிரடி மாற்றத்தைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, சிவப்பு நிற நவீன உடையில் அவர் கொடுத்த போஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வெள்ளித்திரையில் தனது முதிர்ச்சியான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்று வரும் சாரா, தற்போது ‘Euphoria’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 20 வயதிலேயே ₹1000 கோடி வசூல் செய்த படங்களில் கதாநாயகியாக நடித்து சாதனை படைத்துள்ள இவருக்கு, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
