CRIME
“அடிப்பாவி.. பெல்ட்டால் கணவனின் கழுத்தை நெரித்த காதலன்..”கைகளை இறுகப் பிடித்த புதுப்பெண்… கடைசி நொடியில் நடந்த அந்த ட்விஸ்ட்.. கல்யாணமான 45-வது நாளில் நேர்ந்த பயங்கரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
திருமணம் முடிந்த 45 நாட்களிலேயே கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவி, அவரது காதலன் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் வனபர்த்தி மாவட்ட மையத்தில் உள்ள பிரம்மம் காரி தெருவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஹீதா பேகம் என்பவருக்கும், ஷபீர் என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே ஷாஹீதா ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நெருங்கிய உறவினரான ஷகீர் என்பவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் காதலனை மறக்க முடியாத ஷாஹீதா, அவருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, கடந்த 15-ம் தேதி இரவு ஷபீர் தூங்கிக் கொண்டிருந்தபோது, காதலன் ஷகீர் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்துள்ளார். அதே நேரத்தில் அவனது நண்பன் மகேஸ்வர் லால் என்பவன் வீட்டின் வெளியே பைக்கில் காவலுக்கு நின்றுள்ளார். அப்போது மனைவி ஷாஹீதா கணவனின் கைகளை இறுகப் பிடித்துக் கொள்ள, காதலன் ஷகீர் பெல்ட்டால் ஷபீரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷபீர் சத்தமாக அலறவே, குடும்பத்தினர் விழித்துக் கொண்டு கதவைத் தட்டியுள்ளனர். இதனால் ஷபீர் உயிர் தப்பிய நிலையில், தப்பியோட முயன்ற குற்றவாளிகளை குடும்பத்தினர் மடக்கிப் பிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷாஹீதா, அவரது காதலன் ஷகீர் மற்றும் நண்பன் மகேஸ்வர் லால் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
