CRIME
“அம்மா, இதோ வந்திட்டேன்…” வீட்டை அடைய இன்னும் 3 கி.மீ தான்… ஆனா 26 வயது இளநிலைப் பொறியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், 26 வயதான பொது சுகாதாரப் பொறியியல் துறை இளநிலைப் பொறியாளர் ஆகாஷ் லாஹோன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் பாட்டியாபார் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. ஆகாஷ் லாஹோன் துர்கா பூஜை விடுமுறைக்காக நகானில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது வீட்டை அடைவதற்கு வெறும் மூன்று கிலோமீட்டர் தூரமே இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிவசாகர் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பண்டிகைக் காலத்தில் வீட்டிற்குத் திரும்பிய இளைஞர், வீட்டின் மிக அருகில் வந்து உயிரிழந்த இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
