“படிக்கட்டுல இருந்து கீழே விழுந்ததாக பொய்” உடல் முழுவதும் கடிக்கப்பட்ட தழும்புகள்… முதுகில் காயம்… பெத்த பிள்ளையை தாயே கள்ளகாதலனுக்கு இரையாக்கிய கொடூரம்… விசாரணையில் உண்மை அம்பலம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“படிக்கட்டுல இருந்து கீழே விழுந்ததாக பொய்” உடல் முழுவதும் கடிக்கப்பட்ட தழும்புகள்… முதுகில் காயம்… பெத்த பிள்ளையை தாயே கள்ளகாதலனுக்கு இரையாக்கிய கொடூரம்… விசாரணையில் உண்மை அம்பலம்…!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, மூன்று வயது சிறுமியான இஷிகா என்பவளை அவளது தாய் நாகலட்சுமியும், அவரோடு சேர்ந்து வாழ்ந்து வரும் சுபாஷ் என்பவரும் பலத்த காயங்களுடன் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆனால், அந்தச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையின் முதுகில் கடுமையான காயங்கள் இருந்ததோடு, உடலில் பல இடங்களில் கடித்த அடையாளங்களும் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

மருத்துவர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, குழந்தை படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக நாகலட்சுமி கூறியுள்ளார். ஆனால், உடம்பில் இருந்த காயங்கள் அவர் சொன்ன காரணத்தோடு ஒத்துப்போகாததாலும், குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்ததாலும் சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

போலீசாரின் விசாரணையில், நாகலட்சுமி ஏற்கனவே தனது கணவரான சாயி என்பவரைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் தந்தையுடனும், இளைய மகள் இஷிகா நாகலட்சுமியுடனும் இருந்து வந்துள்ளனர். கணவரைப் பிரிந்த பிறகு நாகலட்சுமி, சுபாஷ் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். கடந்த சில காலமாகவே அந்தச் சிறுமி வீட்டில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சந்தேக மரணம் தொடர்பாக நாகலட்சுமி மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in