LATEST NEWS
படத்தைவிட அதற்கு அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் அனிருத்… எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார். அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர்.
இவர் இறுதியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவரின் இசையும் தான். இவர் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 170, கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் விஜயின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைப்பதற்கு நான்கு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகின்றார். ஆனால் படத்தை விட பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு அனிருத் ஐந்து கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ஒரு நாள் பாட்டு கச்சேரிக்கு 5 கோடி சம்பளமா என்று பலரும் வாயடைத்து போய் உள்ளனர்.