இனி யாரும் இதை பண்ணாதீங்க…. ரஜினிகாந்த் எடுத்த திடீர் முடிவு…. ரசிகர்கள் ஷாக்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி யாரும் இதை பண்ணாதீங்க…. ரஜினிகாந்த் எடுத்த திடீர் முடிவு…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால் மற்றும் சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சிலர் ரஜினியின் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகள் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் பெயரும் புகைப்படமும்,குரலையும் ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியாக யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்தின் வழக்கறிஞர் பொது நோட்டீஸ் விடுத்துள்ளார். இதனை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமைகள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in