பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முல்லை… உண்மை இது தானா..?? – cinefeeds
Connect with us

VIDEOS

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முல்லை… உண்மை இது தானா..??

Published

on

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் புது வீடு கட்டி அங்கு குடியரரி உள்ள நிலையில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்கும் பிரச்சனையை ஐஸ்வர்யா youtube சேனலில் வீடியோவாக வெளியிட பெரும் பிரச்சனை கிளம்பியுள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்துடன் கேள்வி கேட்டு வருகிறார்கள். இன்றைய எபிசோடில் தனத்திற்கு தான் மார்பகப் புற்று நோய் இருக்கிறது என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த சீரியலில் முல்லையாக நடிக்கும் லாவண்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த எபிசோடு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 3 குழந்தைகள் இருப்பது போல கதை சென்று கொண்டிருக்க குழந்தைகளுக்கு பதிலாக பெட்டை தான் கையில் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த பெட்டுக்குள் குட்டி ஃபேன் ஒன்றை வைத்துக் கொண்டு லாவண்யா சீரிஸான காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நிஜ குழந்தையை வைத்திருப்பது போலவே உடல் அசைவிலும் சரி கைகளிலும் சரி நீங்கள் வேற லெவலில் நடிக்கிறீங்க என்று அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Lavanya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@lavanyaa_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in