LATEST NEWS
ஆபாச பட நடிகை டூ பார்லிமென்ட் எம்.பி…! செனட்டராக மாஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சரியப்படுத்திய நடிகை.. என்னடா இது..? குழப்பத்தில் இணையவாசிகள்…!!
கொலம்பியாவில் முன்னாள் ஆபாசப் பட நடிகையான டெய்சி அலெஜாண்ட்ரா ஒமான் ஆர்டிஸ் என்பவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு, தற்போது அந்நாட்டின் செனட்டராக (எம்.பி.) பதவியேற்றுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2019-ஆம் ஆண்டு வரை வயதுவந்தோருக்கான திரைப்படத் துறையில் இயங்கி வந்த இவர், அதன் பின்னர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி மக்களின் ஆதரவைப் பெற்று மக்கள் பிரதிநிதியாக உயர்ந்துள்ளார்.
செனட்டராகப் பொறுப்பேற்றுள்ள இவர், வயதுவந்தோருக்கான கன்டென்ட்களை உருவாக்கும் தொழில் சார்ந்த அமைப்பிலும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் தீவிரமாகப் பாடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அரசியல் பிரவேசமும் பதவியேற்பும் உலக அளவில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.
