“செத்துட்டான்னு நினைச்சோம், ஆனா…” ஓடும் பேருந்தின் அடியில் தொங்கிய மனித கை.. உள்ளே காத்திருந்த மரண மாஸ் அதிர்ச்சி.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செத்துட்டான்னு நினைச்சோம், ஆனா…” ஓடும் பேருந்தின் அடியில் தொங்கிய மனித கை.. உள்ளே காத்திருந்த மரண மாஸ் அதிர்ச்சி.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த சம்பவம்..!!

Published

on

கொலம்பியாவில் ஓடும் பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து மனித கை ஒன்று தொங்குவதைக் கண்ட சக வாகன ஓட்டிகள், அதிர்ச்சியடைந்து பேருந்தை நிறுத்தச் செய்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பேருந்து நிறுத்தப்பட்டதும் அருகில் சென்று பார்த்த பொதுமக்கள், அந்த கை எவ்வித அசைவும் இன்றி இருந்ததால் அவர் இறந்துவிட்டதாகவே கருதினர். ஆனால், அங்கு கூடி இருந்தவர்களுக்குக் காத்திருந்த ஆகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த நபர் இறக்கவில்லை, மாறாகப் பேருந்தின் அடியில் சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

விசாரணையில், அவர் வீடற்ற ஒரு ஆதரவற்ற நபர் என்பதும், தூங்குவதற்காகப் பேருந்தின் மெக்கானிக்கல் பகுதிக்குள் ரகசியமாக நுழைந்து உறங்கியதும் தெரியவந்தது. மிகவும் விந்தையாக, அந்தப் பேருந்து பல கிலோமீட்டர் தூரம் பயணித்த போதிலும், எவ்வித அதிர்வையோ ஆபத்தையோ உணராத அந்த வாலிபர் தனது ஆழ்ந்த தூக்கத்தைத் தொடர்ந்துள்ளார். பொதுமக்கள் பலமுறை முயற்சி செய்த பிறகே அவர் தூக்கத்திலிருந்து எழுந்தார். ஒரு வாரம் தூங்காதவரைப் போலக் காணப்பட்ட அந்த நபர், தூக்கக் கலக்கத்துடன் தனக்கு எதுவுமே நடக்காதது போலப் பேருந்தின் அடியில் இருந்து வெளியேறிச் சென்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in