CINEMA
கர்ப்பமாக இருக்கும் போது ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்ற பிரபல சீரியல் நடிகை அடடே இவரா? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

சந்திராலேகா சீரியல் நடிகை தான் ஸ்வேதா பண்டேகர் . இவர் எம்.ஆர் பொறியியல் கல்லூரியில் Bachelor of Technology and Master of Business Administration பட்ட படிப்பை முடித்தார்.இவர் ஆரம்பத்தில் சில விளம்பர படங்கள் நடித்தார்.அதன் பிறகு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.
இதையடுத்து நான் தான் பாலா, பூவா தலையா,பயணங்கள் தொடரும்,பூலோகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 2008 ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ‘வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த படம் பெரும் தோல்வியை தழுவிய நிலையில் சுவேதாவிற்கு அடுத்ததாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் ஒரு படம் நடித்திருக்கிறார். இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பண்டேகர் இறுதியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் மல்யுத்தம் நடக்கும் போட்டியில் போட்டி அறிவிப்பாளராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றியிருந்தார்.
சினிமாவின் வாய்ப்பு குறைய 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அதன் பின்னர் சந்திரலேகா, நிலா போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.இவர் தற்போது சந்திரகலா தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
இதுவரை இந்த தொடர் 1500 எபிசோடுகளை கடந்த நிலையில், இத்தொடரில் நடிகை ஸ்வேதா விற்கு சிறந்த நடிகை விருது பெற்றார்.நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் முடிந்த கையோடு தான் காதலித்து வந்த மால் முருகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் ஒரு பிரபல தொகுப்பாளர்.சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளவர்
தற்போது நடிகை ஸ்வேதா பண்டேகர் கர்ப்பமாக இருக்கும் போது ஜீ தமிழில் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த ‘சூப்பர் ஜோடி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றனர். அந்த நிகழ்ச்சியின் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.