LATEST NEWS
உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ரவீந்தர் மனைவி மகாலட்சுமி.. சேலையில் கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.
இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் படுத்தி வருகிறார்.
அப்படி சேலைகளின் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் எடுத்தும் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகின்றார்.
இதன் மூலமாகவே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வரும் மகாலட்சுமி தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார்.
சேலையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
