‘உங்களுடைய நினைவுகளை நெஞ்சோடு எடுத்துச் செல்கிறேன்’… மறைந்த கணவர் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ருதி… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘உங்களுடைய நினைவுகளை நெஞ்சோடு எடுத்துச் செல்கிறேன்’…  மறைந்த கணவர் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ருதி…

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்துக்கு கார்டியாக அரெஸ்ட் என்று சொல்லப்படும் இருதயம் முடக்கம் ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

Advertisement

இந்தச் செய்தி சின்னத்திரை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் ஸ்ருதியின் கணவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறைந்த தனது கணவரின் புகைப்படத்தை பதிவு செய்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்களும் கண் கலங்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in