“தி.மு.க-வுக்கு ஜாபர் சாதிக்… த.வெ.க-வுக்கு பூபாலனா..?” சமூக ஊடகங்களை அதிரவைக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க-வினரின் நெத்தியடி மீம்கள்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தி.மு.க-வுக்கு ஜாபர் சாதிக்… த.வெ.க-வுக்கு பூபாலனா..?” சமூக ஊடகங்களை அதிரவைக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க-வினரின் நெத்தியடி மீம்கள்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

Published

on

நாகப்பட்டினத்தில் த.வெ.க நிர்வாகி பூபாலன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தி.மு.க-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தற்போது த.வெ.க நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த இரு சம்பவங்களையும் முன்வைத்து, தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய இரு கட்சிகளுமே போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்புடையவை என அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களையும் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகளுக்கு, இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் ஆளுங்கட்சியையும், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.க-வையும் இணையதளங்களில் சாடுவதற்குப் பெருமளவிலான அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in