LATEST NEWS
“MLA பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு ஷாக்.. மரகதம், சத்தியபாமா விவகாரத்தால் உஷாரான விஜய்..!!
அதிமுகவிலிருந்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து முதல்வர் விஜய் தயங்குவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மரகதம், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததே பொதுமக்கள் மத்தியில் சில அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் கருதுகிறார்.
இதன் காரணமாக, இடைத்தேர்தலில் நேரடியாகக் களம் இறக்குவதற்குப் பதிலாக சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளுக்கு வாரிய பதவிகளை வழங்கலாமா என்பது குறித்தும் தவெக தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
