CINEMA
என்றோ விட்டு போயிருப்பேன்…. ஆனால் என் மனைவி ஆர்த்தி தான்….. உருக்கமாக பேசிய SK…!!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் சூரி நடிப்பில் கொட்டுகாளி படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், வீடு வாங்கலாம் என சொல்லாமல், திரைப்படம் தயாரிக்கலாம் என்று தனது மனைவி ஆர்த்தி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
தனியார் டிவியின் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது பேசிய அவர், ‘கொட்டுக்காளி’ போன்ற படங்களை தயாரிப்பது தனக்கு மன திருப்தி தருகிறது. நான் என்றோ சினிமாவை விட்டு போயிருப்பேன். இருப்பினும் நான் சினிமாவில் நீடிக்க என் மனைவிதான் காரணம் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.