LATEST NEWS
கணவருடன் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு…. விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா….!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு மறுப்பு தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காத சினேகா தற்போது கணவர் பிரசன்னாவுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அனைத்து விவாகரத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
