LATEST NEWS
சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் கணவரை பார்த்திருக்கீங்களா…..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 90ஸ் காலகட்டத்தில் இருந்து ஹீரோவாக நடித்து வந்தவர் தற்போது 71 வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளின் பெயர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சண்டைக்கோழி ,மஜா, சென்னை 28, குசேலன், சிவகாசி போன்ற படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றியுள்ளார். கிராபிக் டிசைனராக மட்டுமல்லாமல் தனது தந்தையை வைத்து கோச்சடையான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நினைத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு சௌந்தர்யா விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சௌந்தர்யாவின் முதல் கணவரான அஸ்வின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
