இப்படி ஒரு கொண்டாட்டமா?…. தனது பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை வரலட்சுமி சரத்குமார்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!! - Cinefeeds
Connect with us

CINEMA

இப்படி ஒரு கொண்டாட்டமா?…. தனது பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை வரலட்சுமி சரத்குமார்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி.

சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி.

இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

இநடிகர் சரத்குமார் மற்றும் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்த மூத்த மகள் வரலட்சுமி, இளைய மகள் பூஜா.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அது மட்டுமல்லாமல் குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதுவரை இல்லாத அளவிற்கு அனைவரும் வியக்கும் வகையில் தனது குடும்பத்துடன் மற்றும் ஆதரவற்ற இல்லத்தில் அவர் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

RADHZ😚 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mysweetie_radhuma)