விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ்.

கிராமத்தில் கானா பாடல் பாடி கொண்டிருந்த பூவையார் சங்கீத முறைப்படி கட்ற மாணவர்களுடன் போட்டியிட்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பைனல் வரை சென்றவர்.

அதே சமயம் இவருக்கு விஜய் நடிப்பில் வெளியான திகில் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தில் பாடியது மட்டுமல்லாமல் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதி தன்னுடைய பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.

மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என தற்போது அவர் பிஸியாகிவிட்டார். மிக எளிதில் பூவை யார் இந்த இடத்திற்கு வந்து விடவில்லை.

படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடிய அம்மாவுக்கு உதவி செய்தார்.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தன்னுடைய எட்டு வயதிலிருந்து கானா பாடல்கள் பாடி வருகிறார்.

ரசிகர்கள் இவர் மேலும் வளர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பல்வேறு திரைப்படங்களில் பாடல் பாடி வருகிறார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

 

அதேசமயம் சமீபத்தில் இவர் ஒரு கார் வாங்கிய புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தற்போது பூவையாரின் யாரும் பார்த்திராத சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.