#image_title

தமிழ் சினிமாவில் படங்கள் மட்டுமல்லாமல் தொடர்களில் நடிப்பது போலவே பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் தான் தீபா அக்கா.

பல சீரியல்கள் மற்றும் படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்த இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒருவர்.

இவர் பங்கேற்ற குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அடுத்ததாக இவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தூத்துக்குடியில் ஒரு கிராமத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்து தன்னுடைய நிறத்திற்காக அவருக்கு திறமை இருந்தும் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிறத்திற்காக பல இடங்களில் அவமதிக்கப்பட்டுள்ளார். சிறுவயதில் பள்ளிக்குபடிக்கச் சென்றதை விட அங்குள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அவர் தினமும் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

சிறுவயதில் இருந்தே உதவ பிடிக்கும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார்.

மெட்டி ஒலி சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் 20 வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

அதாவது கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததால் அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது.

அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் அதில் இவரின் நகைச்சுவை மற்றும் குழந்தைத்தனமான பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இவரை தீபா அக்கா என்று பலரும் அன்போடு அழைத்து வருகின்றனர்.

இவரின் எதார்த்தமான பேச்சும் சிரிப்பும் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயனின் டாக்டர் என்ற திரைப்படத்திலும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது பிசியான நடிகையாக மாறிவிட்டார். தன்னுடைய நடிப்பு தொழிலை ஏற்றுக் கொள்ளும் ஒரு கணவரை அவர் எதிர்பார்த்த நிலையில் பலரும் அவரை நிராகரித்து விட்டனர்.

அதன் பிறகு சங்கர் என்பவர் தான் அதற்கு ஒப்புக்கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் தீபா அக்காவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.