தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே விஜய் மற்றும் ஷாலினி ஜோடியாக நடித்து 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இளையராஜா இசையில் வெளியான இந்த திரைப்படப் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தன. பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் அப்போதே உலகம் முழுவதும் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது