தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கோலிவுட் வரை தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளுக்கு இடையே முன்னணி பிரபலமாக வளர்ந்தவர் தான் தனுஷ். இதெல்லாம் ஒரு முகமா இவரெல்லாம் ஒரு நடிகராய் என சினிமாவில் இவரை விமர்சித்தவர்கள் பலரும் உள்ளனர்.
இது போன்ற விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் போராடி என்று சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இவரின் பட பெயர்கள் இடம் பெறாமல் எந்த ஒரு விருது விழாவும் தற்போது நடைபெறுவதில்லை. தேசிய விருதுகளை குவித்து பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை தனுஷ் கலக்கி கொண்டிருக்கிறார்.
இவரின் நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் தனுஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மிகவும் பழமையான புகைப்படம் என்பதால் அந்த அளவிற்கு அவரின் முகாம் சரியாக தெரியவில்லை.