தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக நிகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை லிஜிமோல் ஜோஸ்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப் பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து மலையாள திரை உலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இவரின் எதார்த்தமான நடிப்பை பார்த்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.
இவர் தனது பட்டப் படிப்பை முடித்த பிறகு ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்துள்ளார்.
அதன் பிறகு தான் இவருக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் தீதும் நன்றும் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் சூர்யாவுடன் நடித்த ஜெய் பீம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை தேடி தந்தது.
இன்னும் சொல்லப் போனால் இவரின் திரை பயணத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.
ஜெய் பீம் படத்தில் ராசா கண்ணும் மனைவி கதாபாத்திரமான செங்கேணியாக நடித்தார்.
இவர் தன்னுடைய நீண்ட கால நண்பரான அருண் என்பவரை கேரளாவின் வயநாட்டில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லிஜி மோல் ஜோஸ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
தற்போது அவரின் க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.