LATEST NEWS
சாலையோரத்தில் பரிதாபமாக இறந்து கிடந்த கமல் பட நடிகர்… இவருக்கா இப்படி?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!!
மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் உயரம் குறைவான நடிகர் மோகன். கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் கமலுக்கு நண்பராக வரும் உயரம் குறைவானவர்களில் இவரும் ஒருவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று விட்டார்.
வறுமை காரணமாக திருப்பரங்குன்றத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு காலத்தை ஓட்டி வந்த இவர் ஒரு கட்டத்தில் யாசகம் பெறும் விலக்கி தள்ளப்பட்டு சாலையோரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவ்வாறு சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினிமாவில் அடையாளப்பட்டு அடையாளமே இல்லாமல் மோகன் உயிரிழந்து கிடந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.