“பார்க்கும்போதே நெஞ்சு பதறுது..” ஓடும் காரின் மேல் படுக்க வைத்து வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி.. கும்பலின் வெளிச்செயல்.. பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“பார்க்கும்போதே நெஞ்சு பதறுது..” ஓடும் காரின் மேல் படுக்க வைத்து வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி.. கும்பலின் வெளிச்செயல்.. பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஓடும் காரின் கூரையில் இளைஞர் ஒருவரின் இரு கைகளும் ஜன்னல் கண்ணாடிகளுக்கு இடையே நசுக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில், கார் அதிவேகமாக சாலையில் இயக்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் இந்த அதிர்ச்சியூட்டும் புகாரை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலின் காரணமாகவே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கூற்றுப்படி, எதிரிகள் முதலில் அந்த இளைஞரைத் தங்களது காரால் மோதி கீழே தள்ளியுள்ளனர். பின்னர், அவரை கடுமையாகத் தாக்கியதோடு நிறுத்தாமல், காரின் கூரையின் மீது படுக்க வைத்துள்ளனர். தொடர்ந்து, அவரது இரண்டு கைகளையும் காரின் முன் பக்க ஜன்னல்களின் கண்ணாடிகளுக்கு இடையே வலுக்கட்டாயமாக நுழைத்து, கண்ணாடிகளை மேல்நோக்கி ஏற்றிப் பூட்டியுள்ளனர். கைகள் அசையாதவாறு லாக் செய்யப்பட்ட நிலையில், காரை சாலையில் மிக அதிவேகமாக ஓட்டிச் சென்று இந்த கொடூரத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in