LATEST NEWS
“அதற்கு இதுதான் காரணம்”…. முதல் முறையாக குடும்ப ரகசியத்தை பகிர்ந்த கௌதம் கார்த்திக்…. வைரலாகும் உருக்கமான பதிவு….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவரைப் போலவே இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.
இருந்தாலும் இவரின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு பெறவில்லை. கடந்த வருடம் இவரின் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சுமா மோகனை இவர் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இவர்களின் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய பாட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கௌதம் கார்த்திக் ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் குடும்பம் ஒன்றாக இருக்க பாட்டி தான் முக்கிய காரணம் என்று மிகுந்த நிகழ்ச்சியுடன் அவர் பதிவிட்ட நிலையில் அந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
