LATEST NEWS
நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப குத்து விளக்கு தனமா இது?…. மாடர்ன் உடையில் கலக்குறாங்களே…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்த சுஜிதா தனுஷ் தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சீரியல் அல்லது சினிமா என்ற ஒரு நிலை வந்த போது சுஜிதா சீரியலை தேர்வு செய்தார்.
இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ள நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். 40 வயதாகும் சுஜிதா இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன்னுடைய இளமையின் ரகசியம் குறித்தும் அண்மையில் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சேலையில் குடும்பகுத்து விளக்காக நடித்துவரும் இவர் மாடர்ன் உடையில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
