“இதை என்னால் உணரவே முடியவில்லை”…. மகன்கள் குறித்து முதல் முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதை என்னால் உணரவே முடியவில்லை”…. மகன்கள் குறித்து முதல் முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர். அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அதிக நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் தன்னுடைய இரட்டைக் குழந்தைகள் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசி உள்ளார். இரண்டு மகன்களுக்கு தந்தை என்பதை தன்னால் தற்போது வரை உணர முடியவில்லை, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன், என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களில் ஒன்றே தன்னுடைய குழந்தைகள் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in