LATEST NEWS
இன்றே கடைசி நாள்..! ரேஷன் அட்டைதார்களே உடனே கிளம்புங்க.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் விரல்ரேகை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ரேஷன் அட்டைதாரர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த விரல்ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருந்து இதுவரை eKYC அப்டேட் செய்யாத பயனாளிகள், தங்களின் கார்டுகள் ரத்து செய்யப்படுவதையோ அல்லது சலுகைகள் நிறுத்தப்படுவதையோ தவிர்க்க உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று விரல்ரேகையை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த விரல்ரேகை பதிவை மேற்கொள்வது அவசியமாகும்.
