பரபரப்பு.! திருமாவளவன் காரில் தொங்கியபடி சென்ற விசிக நிர்வாகி… நடந்தது என்ன..? சமூக வலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரபரப்பு.! திருமாவளவன் காரில் தொங்கியபடி சென்ற விசிக நிர்வாகி… நடந்தது என்ன..? சமூக வலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

கடலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் காரில், அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரின் பக்கவாட்டில் தொங்கியவாறே, அந்த நிர்வாகி திருமாவளவனுடன் தீவிரமாக உரையாடியதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிவேகப் பயணத்தின்போது காரின் கதவைப் பிடித்துக்கொண்டு அவர் தொங்கிய நிலை, அங்கிருந்தவர்களையும் வீடியோவைப் பார்த்தவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிறிது தூரம் சென்ற பிறகு காரின் வேகம் குறைக்கப்பட்டதை அடுத்து, அந்த நிர்வாகி பத்திரமாக கீழே இறங்கினார்.

Advertisement

விசிக தலைவர் திருமாவளவனுடன் இவ்வாறு காரில் பயணித்ததை ஒரு பெருமையான விஷயமாகக் கருதி, அந்த நிர்வாகியே இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் போக்குவரத்து விதிகளுக்கும் சவாலாக அமைந்த இந்த ஆபத்தான வீடியோ தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in