அடக்கடவுளே..! “இனி வாழவே முடியாது…”  கடன் தொல்லையால் துடிதுடித்து முடிந்த 3 உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! “இனி வாழவே முடியாது…”  கடன் தொல்லையால் துடிதுடித்து முடிந்த 3 உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் உள்ள மோர்வாடி பகுதியில் இயங்கி வரும் ‘கரிஷ்மா க்ளோரி சொசைட்டி’ வாடகை வீட்டில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 3 உறுப்பினர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோனவர்கள் 50 வயதான வினோத் பிள்ளை, அவரது 45 வயதான மனைவி ஷீலஜா பிள்ளை மற்றும் அவர்களின் 19 வயதான மகள் பூர்ணிமா பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விஷப் பொருளை உட்கொண்டதோடு, தங்களது அறையில் கரியை எரித்துப் புகையை உண்டாக்கி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர். தகவலறிந்ததும் உடனடியாக மீட்கப்பட்டு அனைவரும் ஒய்.சி.எம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே வினோத் பிள்ளை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவி ஷீலஜாவும் மகள் பூர்ணிமாவும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரிழந்தனர்.

Advertisement

சம்பவ இடத்தில் இருந்து காவல் துறையினருக்குத் தற்கொலை கடிதம் (Suicide ஒன்று கிடைத்துள்ளது. அதில், தாங்கள் சந்தித்து வந்த தீவிர நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வந்த கடன் சுமையே இந்த தீவிர முடிவுக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை ஆய்வு செய்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in