LATEST NEWS
மீண்டும் ஒரே நாளில் .. அஜித் – விஜய்யை வைத்து பக்காவாக பிளான் போட்ட இயக்குனர்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித் மற்றும் விஜயின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவது வழக்கம்தான். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் எப்போதுமே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனர். விஜய் முயல் வேகத்தில் செல்லும்போது அஜித் ஆமை வேகத்தில் நகர்வது எந்த விதத்தில் நியாயம் என்று அஜித்தின் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். அதாவது துணிவு படம் வெளியான போது விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானது.
ஆனால் வாரிசு படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தந்தை மற்றும் மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கின்றார். அதே சமயம் இதில் 3d vfx டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதால் அதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வரை விஜய் சென்று வந்தார்.
இப்படி மின்னல் வேகத்தில் விஜய் சென்று கொண்டிருக்கும்போது அவருடைய போட்டி நடிகரான அஜித் மட்டும் விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்காமல் காலதாமதம் செய்து வருகிறார். இந்த நிலையில் அஜித்தை வைத்து இந்த முறை மகிழ் திருமேனி பக்காவாக பிளான் போட்டுள்ளார். அதாவது தளபதி 68 மற்றும் விடாமுயற்சி இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவர உள்ளது.
வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பை அபுதாபியில் தொடங்க உள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். அதனைப் போலவே விஜயின் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கப்படுகிறது. எனவே வெங்கட் பிரபு மற்றும் மகிழ் திருமேனி இருவரும் ஒரே சமயத்தில் படபிடிப்பை தொடங்கி படத்தை ஒரே நாளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். மீண்டும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தல தளபதி இருவரும் தளபதி 68 மற்றும் விடாமுயற்சி படத்தின் மூலம் மோதிக் கொள்கின்றனர்.