வைஷ்ணவி முதல் சித்ரா வரை… தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்… யார் யார் தெரியுமா..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

வைஷ்ணவி முதல் சித்ரா வரை… தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்… யார் யார் தெரியுமா..??

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் அடிக்கடி நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் சிலரின் மரணம் என்றும் மறவாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன்படி தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வைஷ்ணவி:

Advertisement

கடந்த 2006 ஆம் ஆண்டு சன் டிவி புகழ் வைஷ்ணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் விசில் மற்றும் பாபா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. திருமணமான சீரியல் நடிகர் ஒருவர் இவரை காதலித்து ஏமாற்றி விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சோபனா:

Advertisement

சின்னத்திரையில் காமெடி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவுக்கு அக்காவாகவும் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சபர்ணா:

Advertisement

சின்னத்திரை நடிகை ஆன இவர் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். அதேசமயம் காளை மற்றும் பூஜை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் இவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சாய் பிரசாந்த்:

Advertisement

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்பட்டது.

சித்ரா:

Advertisement

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தனிப்பட்ட சில காரணங்களால் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement