100 ஆண்களுடன் கட்டாய உறவு… கணவர்களின் அத்துமீறல்… ‘ஸ்விங்கிங்’ கலாசாரத்தின் பின்னணியில் நடக்கும் அதிர்ச்சி பின்னணி.. வெளியான திடுக்கிடும் உண்மைகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

100 ஆண்களுடன் கட்டாய உறவு… கணவர்களின் அத்துமீறல்… ‘ஸ்விங்கிங்’ கலாசாரத்தின் பின்னணியில் நடக்கும் அதிர்ச்சி பின்னணி.. வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!

Published

on

பிரிட்டனில் ஜோடிகளை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்ளும் ‘ஸ்விங்கிங்’ கலாசாரம் அதிகரித்துவரும் நிலையில், இதனால் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக பிபிசி நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் கணவன் அல்லது காதலனின் தீவிர வற்புறுத்தல் மற்றும் கட்டாயத்தின் காரணமாகவே பல பெண்கள் விருப்பமின்றி இதில் ஈடுபட நேரிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த ஆய்வில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில் ஒரு பெண், தன் விருப்பத்திற்கு மாறாக 100-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைக்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சம்மதமின்றி நடத்தப்படும் இத்தகைய செயல்கள் அப்பட்டமான பாலியல் வன்கொடுமையே தவிர வேறில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் ஆதங்கத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

வெளிப்புற பார்வைக்கு இது இருதரப்பு சம்மதத்துடன் நடக்கும் நவீன வாழ்க்கைமுறையாகச் சித்திரிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பெண்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான மற்றும் உடலியல் ரீதியான சுரண்டல்கள் அதிகம் என்பது இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in