LATEST NEWS
இரவோடு இரவாக மு.க.அழகிரி மகள் கயல்விழி திடீர் கைது… அடுத்த சில மணி நேரங்களிலேயே ரிலீஸ்.. நடந்தது என்ன.? பெரும் பரபரப்பு..!!
சென்னை அடையாறில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் சாஸ்த்ரி நகர் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து காவல்துறையினர் கயல்விழியைக் கைது செய்தனர். இருப்பினும், அதைத் தொடர்ந்து அவர் காவல் நிலையப் பிணையில் (Station Bail) விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
