LATEST NEWS
பகீர்.! ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லைனா அவ்ளோதானா..? வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நடக்கும் கொள்ளை… ரூ.7,000 கோடிக்கு மேல் அபராதம்…!!
வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்கத் தவறுகின்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த தகவல்களின்படி, 2025–26 நிதி ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணமாக ரூ.7,086.63 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 2024–25 நிதி ஆண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.6,974.79 கோடியை விட அதிகமாகும்.
கடந்த 4 நிதி ஆண்டுகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத காரணத்திற்காக மட்டும் வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.26,170 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ஈட்டியுள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் முன்னணித் தனியார் வங்கிகளே அதிக அளவில் அபராதத் தொகையை வசூலித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேவேளையில், எஸ்பிஐ உள்ளிட்ட பல அரசுத்துறை வங்கிகள் தங்களது சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கான இந்த அபராதக் கட்டணத்தை முழுமையாக விலக்கியுள்ளன அல்லது முறைப்படுத்தியுள்ளன. மேலும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகச் செயல்படும் ‘ஜன் தன்’ உள்ளிட்ட அடிப்படைச் சேமிப்புக் கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புக்கான எந்தவொரு அபராதமும் விதிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
