என்னப்பா சொல்றீங்க.. இதற்கு முன்பு ஆடியோ லான்ச் இல்லாமல் வெளியான விஜயின் 2 படங்கள் ப்ளாப்பா..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னப்பா சொல்றீங்க.. இதற்கு முன்பு ஆடியோ லான்ச் இல்லாமல் வெளியான விஜயின் 2 படங்கள் ப்ளாப்பா..??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதுவரை 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதாவது பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்குப் பின்னணியில் அரசியல் அழுத்தமும் மற்ற காரணங்களோ இல்லை என்று 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு முன்பு விஜய் நடித்த இரண்டு திரைப்படங்கள் ஆடியோ லான்ச் இல்லாமல் வெளியான நிலையில் அந்த இரண்டு படங்களுமே படு தோல்வியை சந்தித்தது. அதாவது விஜய் நடிப்பில் வெளியான பைரவா மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆடியோ லான்ச் இல்லாமல் வெளியான நிலையில் தோல்வியை சந்தித்தது. அதனால் தற்போது லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் சற்று கலக்கம் நிலவி வருகிறது. இது தொடர்பான பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Filmipedia 1m இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@filmipedia_)

Advertisement
Continue Reading
Advertisement