LATEST NEWS
லியோ ஆடியோ லான்ச் ரத்து… ஒத்த வார்த்தையில் காரணத்தை சொன்ன புஸ்ஸி ஆனந்த்.. என்ன சொன்னார் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதுவரை 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.
இதற்குப் பின்னணியில் அரசியல் அழுத்தமும் மற்ற காரணங்களோ இல்லை என்று 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் உள்ளதா என்று ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது குறித்து தயாரிப்பாளர் இடம் கேளுங்கள் அவர்கள் சொன்ன காரணமே உண்மைதான் என்று ஒத்த வார்த்தையில் பதில் சொல்லி முடித்தார்.