படபிடிப்பில் திடீரென விபத்தில் சிக்கிய நடிகர் ராம்சரண்… படப்பிடிப்பு ரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

படபிடிப்பில் திடீரென விபத்தில் சிக்கிய நடிகர் ராம்சரண்… படப்பிடிப்பு ரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் படபிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

Advertisement

இந்த நிலையில் படபிடிப்பின் போதே திடீரென ஏற்பட்ட விபத்தில் ராம்சரண் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பத்து நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் ராம்சரன் ரசிகர்கள் அனைவரும் கவலையில் உள்ளனர். அதே சமயம் கேம் சேஞ்சர் படபிடிப்பை நடிகர்களின் கால் சூட் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் ரத்து செய்துள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement