LATEST NEWS
ஈரானுக்கு யாராவது அணு ஆயுதங்கள் கொடுத்தால்.. அது உங்களுக்கு நல்லதல்ல சொல்லிட்டேன்… அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!!
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய பதற்றமான சர்வதேசச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், வல்லரசு நாடுகளின் தலையீட்டைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிபர் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளமான ‘டிரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எந்தவொரு ஆயுதமும் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தனிப்பட்ட முறையில் தமக்கு உறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகத் தலைவர்களின் அந்த வார்த்தைகளைத் தாம் முழுமையாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த உறுதியையும் மீறி ஈரானுக்குச் சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஆயுதங்களை விநியோகித்தால், அது அந்த நாடுகளின் சொந்த நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அத்தகைய தவறான நடவடிக்கைகள் அந்த நாடுகளுக்கே மிக மோசமான மற்றும் பாதகமான விளைவுகளைத் தேடித்தரும் என்றும் அவர் அந்தப் பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
