கொடூரம்..! “என் பொண்ணுக்கு பிறந்தநாள் வீட்டுக்கு வா” காவலர் மகளை அழைத்துச்சென்று சீரழித்த மற்றொரு காவலர்… நெஞ்சை உலுக்கும் சமபவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொடூரம்..! “என் பொண்ணுக்கு பிறந்தநாள் வீட்டுக்கு வா” காவலர் மகளை அழைத்துச்சென்று சீரழித்த மற்றொரு காவலர்… நெஞ்சை உலுக்கும் சமபவம்..!!

Published

on

மத்தியப் பிரதேசம் போபால் அருகே காவல் அதிகாரி ஒருவரின் 17 வயது மகள், சக காவலராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவலர், தனது மகளுக்கு பிறந்தநாள் விழா என்று பொய் கூறி, அச்சிறுமியைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு யாரும் இல்லாத நன்மதிப்பைப் பயன்படுத்தி, சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இக்கொடூர குற்றத்தைச் செய்துள்ளார்.

இந்தக் கொடூரம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, மற்றொரு காவலர் வீட்டின் வாசலில் காவலுக்கு நின்றுள்ளார். அந்தச் சமயத்தில் காவலுக்கு நின்ற காவலருடன் அவருடைய 3 வயது மகனும் உடன் இருந்தது இக்கொடுமையின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில், குற்றத்தில் ஈடுபட்ட காவலர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in