தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. ஒரு பக்கம் வில்லனாகவும் மறுபக்கம் காமெடியன் மற்றும் குணச்சித்திர நடிகனாக கலக்கியவர்.

அவர் உயிரிழந்து விட்டாலும் இன்றும் பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இவர்தான் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கண்ணியான ரசிகர்களை சுண்டி எடுத்த சில்க் சுமிதாவை நடிகையாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

சில்க் ஸ்மிதா நடிக்க வருவதற்கு முன்பு வீட்டில் வேலைக்கார பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது பினு சக்கரவர்த்தியிடம் கவர்ச்சியான நடிகை வேண்டும் என்று பட தயாரிப்பாளர் கேட்டுள்ளார்.

அதற்கு யாரை தேர்வு செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டில் அருகில் உள்ள மாவரைக்கும் மிஷின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன்.

அவர் கண்களில் ஏதோ ஈர்ப்பு இருந்தது. அவர்தான் சில்க் சுமிதா. இவரின் இயற்பெயர் விஜயமாலா.

அவரைப் பார்த்த உடனேயே வினோத் சக்கரவர்த்தி நடிக்க தயாரா என்று கேட்டுள்ளார், அதற்கு அவரும் தான் நடித்த சம்மதம் தெரிவித்து சினிமாவில் அறிமுகமானார்.

முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய படம் மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர்.

சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக கொடி கட்டி பறந்த இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

அவர் உயிரிழந்த இத்தனை வருடங்கள் ஆகியும் அவரின் புகழை ரசிகர்கள் என்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.