#image_title

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இன்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்த நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் காமெடி மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் பால சரவணன்.

இவர் தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சசிகுமார் நடித்த குட்டிப்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பாலசரவணன்.

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் பிறகு பண்ணையாரும் பத்மினியும், என்றென்றும், வேதாளம்,கூட்டத்தில் ஒருவன் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.

சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய பால சரவணன் ஹேமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன.

சமீபத்தில் காதலர் தினத்தில் பால சரவணன் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான பதிவை அவரின் மனைவி இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது இவரின் அழகிய குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/SaheHema/status/1625409870940995584