தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை உமாரியாஸ்.
அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஒரு திரைப்படம் நடித்துள்ளார்.
இப்போது வரை 15 படங்களில் நடித்த இவர் எட்டு தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவை அனைத்துமே தமிழில் தான்.
தற்போது நடிப்பிலிருந்து ஒதுங்கியுள்ள இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இதனிடையே 1992 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரியாசை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரின் மூத்த மகனான ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால் இவரின் இரண்டாவது மகனை பலரும் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.
உமாரியாஸ் தனது இரண்டு மகன்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.