தனது தாயின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறி அழுத ராணுவ வீரர்..! – நெஞ்சை உருக வைக்கும் காட்சி..! - cinefeeds
Connect with us

Uncategorized

தனது தாயின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறி அழுத ராணுவ வீரர்..! – நெஞ்சை உருக வைக்கும் காட்சி..!

Published

on

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொல்லி வெளியில் தனது பாதுகாப்பை கூட பார்க்காமல் மக்களுக்காக தினமும் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீராக பணிபுரிந்து வருகிறார் சக்திவேல் அவர்கள். இவர் சேலம் மேட்டூரை சார்ந்த மேச்சேரி என்ற ஊரில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஒன்றாக வசித்து வந்தனர்.

Advertisement

திடீர் என்று உடல் நல குறைவால் சக்திவேல் அவர்களின் தாயார் உ யிர் இ ழந்தார். இந்த விஷயத்தை அவரது மகன் சக்திவேல் அவர்களிடம் தெரிவிக்க முயற்சி செய்தார் அவரது தந்தை தங்கவேல். தனது தாயின் இறப்பை கேள்விப்பட்ட சக்திவேல் கதறி அழுதார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு இல்லாததால் தொலைவில் இருந்து புறப்பட்டும் வர இயலவில்லை.

தனது தாய்யை வீடியோ காலில் பார்த்த ராணுவ வீரர் சக்திவேல் கதறி அழுதார் தன் தாயின் இறப்பில் அருகில் நிற்கமுடியாமல் தவித்து போனவர் தேம்பி தேம்பி அழுதார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து உள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement