Uncategorized
“பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த புதிய காதல்”..! – வெளியான விடியோவால் அ திர் ச்சியில் ரசிகர்கள்…
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நேற்று பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைந்தார். இன்று இதுவரை இரண்டு ப்ரோமோகள் வெளியான நிலையில், எங்கடா இதுவரை காதல் தூது எதுவும் காணவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த நேரத்தில் தற்போது அது ப்ரோமோ மூலம் காட்டியுள்ளனர்.
அந்த ப்ரோமோவில், கேப்ரில்லா பாத்திரத்தை கழுவும் போது பாலாஜி இன்னும் என்னா வேலை செஞ்சிட்டு இருக்க என கேட்டு சிரித்த முகத்துடன் இரண்டு பேரும் பேசியுள்ளனர். இந்த ப்ரோமோவில் இரண்டு பேருக்கும் காதல் பற்றியதுபோல பிக்பாஸ் காதல் பாட்டை ஓட விட்டுள்ளனர். அவர்கள் எதார்த்தமாக செய்யும் விஷயத்தை ப்ரோமோவில் இப்படி காட்டியது அப்பட்டமாக தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடிகள் கவின் மற்றும் லாஸ்லியா போல், தற்போது பிக்பாஸ் 4-ல் பாலாஜி மற்றும் கேப்ரியெல்லா இருவருமிடையே காதல் மலர்வது போல் காண்பித்துள்ளனர். ஒரு வேளை காதல் மலர்ந்திருக்குமா? என இனி வரும் நிகழ்ச்சியின் மூலம் தான் காணமுடியும்.