இப்படியும் ஒரு கிப்டா? மணமேடையில் ஷாக்கான மணமக்கள்..! – cinefeeds
Connect with us

LifeStyle

இப்படியும் ஒரு கிப்டா? மணமேடையில் ஷாக்கான மணமக்கள்..!

Published

on

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று திருமணம். அதனால் தான் திருமணத்தின் போது மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் பார்த்து, பார்த்து மெனக்கெட்டு சில விசயங்களைச் செய்கின்றனர்.

நல்லநாள் பார்த்து, சுற்றத்தார் அழைத்து நடத்தப்படும் திருமணங்கள் வாழ்வில் மறக்கவே முடியாத சந்தோசங்களில் ஒன்று. அதிலும், திருமணத்து சொந்த,பந்தங்களை திரட்டிக்கொண்டு வருவதும், நண்பர்கள், உறவுகள் வந்திருந்து வாழ்த்துவதும் மறக்க முடியாத நிகழ்வாக அமைகிறது.

Advertisement

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடக்கும் முக்கியத் திருப்புமுனைகளில் ஒன்றாக திருமணமும் இருக்கிறது. அதனால்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அதிலும் திருமண வீட்டில் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் அங்கே நடக்கும் கேலிகளை சொல்லவும் வேண்டுமா? அப்படித்தான் இங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருமண நாளில் மணமேடையில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் கிப்ட் ஒன்றைக் கொடுக்கிறார்கள்.

ஸ்பாட்டிலேயே பிரிக்கச் சொல்லி நண்பர்கள் நிர்பந்திக்க மணமக்களும் அப்படியே செய்கிறார்கள். அந்த பெரிய பர்சலை திறந்ததும், அதில் வைகைப்புயல் வடிவேலு ஒன்றுமில்லையே எனச் சொல்லும் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தனர். இதை பார்த்த மொத்த அரங்கமும் விழுந்து, விழுந்து சிரித்ததை சொல்லியும் தெரியவேண்டுமா?

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in