காதல் பட சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் பட சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

பாலாஜி சக்திவேல் இயக்கி பரத் நடித்த காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சந்தியா. அதன்பின்னர் டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், வெள்ளித்திரை, மகேஷ் சரண்யா மற்றும் பலர், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

ஆனால், இவர் நடித்த காதல்,டிஸ்யும் படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியை தரவில்லை. சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. இவர் சினிமா உலகத்திற்காக சந்தியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

Advertisement

தற்போது சந்தியா சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல கண்மணி சீரியலில் நடிகையுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது எந்த கதாபாத்திரம் என்று தான் தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்காகியுள்ளனர். மிக பெரிய நட்சத்திரமாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சந்தியா திருமணம் முடித்து நடிப்பை நிறுத்தியிருந்தார். தற்போது சின்னத்திரையில் மீண்டும் நடிக்க வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in